கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை - பீடி இலைகளுடன் ஒருவர் கைது
இலங்கை கடற்படையினரால் புத்தளம் காரைதீவு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 1947 கிலோகிராம் எடையுள்ள பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடல் மார்க்கமாக நிகழ்கின்ற கடத்தல்களை தடுப்பதற்காக தீவைச் சுற்றியுள்ள கடலோர மற்றும் கடல் பகுதிகளில் கடற்படை அடிக்கடி ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதிரடி நடவடிக்கை

இந்தநிலையில், வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான அதிகாரி எஸ்.எல்.என்.எஸ் விஜயா தலைமையில் இன்று காலை காரைதீவு கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 1947 கிலோகிராம் எடையுள்ள 65 பீடி இலை கட்டுகளை கடத்தி வந்த சந்தேக நபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம், காரைதீவு பகுதியைச் சேர்ந்த 50 வயது நிரம்பியவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பீடி இலைகளுடன் கற்பிட்டி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்