கீரி சம்பா செய்கையை விரிவுபடுத்த திட்டம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
Mahinda Amaraweera
Sri Lanka
Economy of Sri Lanka
By Shalini Balachandran
அடுத்த பருவத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2000 ஏக்கர் கீரி சம்பா செய்கையை விரிவுபடுத்தவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இம்முறை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் உத்தரவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல்
அத்தோடு, நெல் சந்தைப்படுத்தல் சபை கடன் வாங்காமல் சபைக்கு சொந்தமான பணத்தில் நெல்லை கொள்வனவு செய்வதாகவும் இதன் காரணமாக கடந்த இரண்டு பருவங்களிலும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு இலாபம் ஈட்ட முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனுடன், இம்முறை நெல் சந்தைப்படுத்தல் சபை தமது பணத்தில் குறிப்பிட்ட அளவு நெல்லை கொள்வனவு செய்யும் எனவும் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்