60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
பல்வேறு சிக்கல்கள் மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena)தீர்மானித்துள்ளார்.
மூன்றாவது டோஸாக எம்.பி.க்களுக்கு பைசர் தடுப்பூசி போடப்படவுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்கப்பட வேண்டும் என்று படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ அண்மையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன்படி பணிப்பாளர் நாயகம் இந்த முடிவை எடுத்துள்ளார். இதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இராணுவத் தலைமையகத்தில் மூன்றாவது டோஸ் வழங்கப்படும்.
இதேவேளை, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் படைக்கல சேவிதர் குறிப்பிட்டார்.