தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணுடன் பொலிஸ் அதிகாரியின் மோசமான செயற்பாடு - உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளம் யுவதி ஒருவருடன் தவறாக நடக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கண்டி தலத்து ஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டை சோதனையிடவேண்டுமெனத் தெரிவித்து குறித்த யுவதி தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கு யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.
அந்த யுவதி சம்பவம் தொடர்பில் தனது உறவினர்களிடம் முறையிட்டதை அடுத்து, அவர்கள் அதை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, அந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தரை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதுடன், அவர் கைது செய்யப்படுவார் என்றும், அவர் மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்டி பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதாத் மாசிங்க தெரிவித்துள்ளார்.
