இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை

Kanaka Herath Ranil Wickremesinghe Sri Lanka Economy of Sri Lanka
By Sathangani Dec 19, 2023 02:49 AM GMT
Report

இலங்கையில் அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

அதற்கான அடிப்படை பணிகள் அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளப்படும் எனவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்


சர்வதேச முதலீட்டு செயலமர்வு 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

“இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் சர்வதேச முதலீட்டு செயலமர்வு ஒன்றை அடுத்த வருடம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை | Action To Introduce Digital Economy Policy

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்காக இரண்டு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நிதியை டிஜிட்டல் மயமாக்கலுக்கு பயன்படுத்துவதன் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை மக்கள் அதன் பயனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ரணில் விக்ரமசிங்க அதிபராக நியமிக்கப்படும் வரை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய வார்த்தைகள் இந்த நாட்டில் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டன.

வெளிநாடொன்றில் இலங்கை வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

வெளிநாடொன்றில் இலங்கை வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு


அதிபரின் தூர நோக்கு 

அதிபரின் தொலைநோக்குப் பார்வையினால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவை இலகுவாகப் பயன்படுத்த முடியும்.

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை | Action To Introduce Digital Economy Policy

உலக நாடுகளில் இந்த முறைமைகளைப் பயன்படுத்தி, பொருளாதாரம் எவ்வாறு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டுகொள்ள முடிந்துள்ளது. முன்னேறும் உலகுடன் இணைந்து, நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

இதன்படி, நாட்டின் பொருளாதாரத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் வழங்கி வந்த பங்களிப்பை 03 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர் : கொழும்பில் சம்பவம்

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர் : கொழும்பில் சம்பவம்


வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

மேலும், புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், செயற்திறன் மிக்க அரச சேவையைப் பேணுவதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது. அதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் ஆற்றல் கிடைக்கின்றது.

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை | Action To Introduce Digital Economy Policy

தனியார் துறை ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி வேகமாக முன்னேறிச் செல்கின்றது. அதன் ஊடாக போட்டித் தன்மை கொண்ட சேவைகளை வழங்குவதற்கு அரச சேவையை வலுப்படுத்தும் ஆற்றல் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உண்டு.

இந்த முழுமையான செயல்முறைகளின் மூலம் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.” என தெரிவித்தார்.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019