திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்ற துரித நடவடிக்கை : அரச அதிகாரிகளும் துணையாம்

Trincomalee M. A. Sumanthiran Buddhism
By Vanan Oct 26, 2023 06:47 AM GMT
Report

தமிழர் தாயகமான திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற நீண்டகாலத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பணிமனையில் மாவட்ட கிளைத் தலைவர் எஸ்.குகதாஸன் தலைமையில் இடம்பெற்ற பல்வேறுபட்ட சந்திப்புக்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறிய அவர், சிறிலங்கா பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தற்போது துரித கதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிங்கள - பௌத்த மாவட்டமாக

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், குச்சவெளி பிரதேச செயலக பிரிவிலே 30க்கு மேற்பட்ட புத்த சிலைகளையும், பௌத்த வணக்கஸ்தலங்களையும் உருவாக்குவதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்ற துரித நடவடிக்கை : அரச அதிகாரிகளும் துணையாம் | Action To Make Trincomalee A Buddhist District

கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் கைது

கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் கைது

இதில் 23 இடங்களில் கட்டட வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

பௌத்த சமயத்தவர்கள் எவரும் வாழாத, ஒருவர் கூட இல்லாத பிரதேசங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இதனை தடுப்பதற்கான உத்தரவுகள் ஆளுநர் மட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு படையினர் நேரடியாகவே இந்தக் கட்டிட வேலைகளில் ஈடுபடுகின்றார்கள்.

எந்தவிதமான சட்டபூர்வமான அதிகாரமும் இல்லாமல் - அனுமதியும் பெறாமல் எல்லாம் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

இதற்கு முக்கியமான காரணம் இந்த மாவட்டத்தை ஒரு சிங்கள பௌத்த மாவட்டமாக காண்பிப்பதற்கான பிரயத்தனம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இது சம்பந்தமாக ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் மக்கள் எங்களுக்கு பல காலமாக முறைப்பாடுகளை செய்திருக்கிறார்கள். சில இடங்களில் நாங்கள் சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். ஆனால் இதில் சட்டரீதியாக கையாள முடியாத சில விடயங்களும் இருக்கின்றன.

கடலின் அடியில் ஆய்வு செய்ய சீனக்கப்பலுக்கு அனுமதி மறுப்பு : நாரா விஞ்ஞானி தெரிவிப்பு

கடலின் அடியில் ஆய்வு செய்ய சீனக்கப்பலுக்கு அனுமதி மறுப்பு : நாரா விஞ்ஞானி தெரிவிப்பு

சமூகங்களுக்கு இடையிலே முறுகலை தோற்றுவிப்பதற்கான சந்தர்ப்பங்கள் வேண்டும் என்றே உருவாக்கப்படுவதனை காணக் கூடியதாக இருக்கிறது. இவை எல்லாம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கான அரசியல் ரீதியான அழுத்தங்களை நாங்கள் தொடர்ந்தும் கொடுப்போம்.

அரச அதிகாரிகளின் அனுசரனை

இதிலே பிரதானமான குறைபாடு என்னவென்றால், அரச நிறுவனங்கள், அரச அதிகாரிகளின் அனுசரனையோடு நில அபகரிப்புகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்ற துரித நடவடிக்கை : அரச அதிகாரிகளும் துணையாம் | Action To Make Trincomalee A Buddhist District

இது பல்வேறு பிரதேசங்களில் நடைபெறுகிறது. புதிதாக அண்மைக் காலத்தில் மூதூர் கங்குவெளி குளத்தை ஆக்கிரமித்து அந்தக் குளத்தினுள் வேற்று இனத்தவர்கள் விவசாயம் செய்கிறார்கள்.

இந்திய இராணுவத்திற்கு வாங்கப்படவுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள்

இந்திய இராணுவத்திற்கு வாங்கப்படவுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள்

இது சம்பந்தமாக பலதரப்பட்ட முறைப்பாடுகள் எழுத்திலே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அதிகாரிகளிடம் முறையிடுமாறு காவல்துறையினர் கூறுகின்றார்கள். ஆனாலும் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 

அரச அதிகாரிகளின் அனுசரணையுடன் தான் திருகோணமலையில் நில ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகிறது” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025