இலங்கை சுங்க சட்டத்தை புதுப்பிக்க நடவடிக்கை!
இலங்கை சுங்க சட்டத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபரால், 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் இன்று(13) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையின் அரசக்கடன்
“2032ஆம் ஆண்டளவில் இலங்கையின் அரசக்கடன் 95 சதவீதமாகக் குறைக்கப்படும்.
அரச வங்கிகளின் 20 சதவீத பங்குகளை மூலோபாய முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கி கட்டமைப்பில் மூலதனத்தை மேம்படுத்தும் செயன்முறைக்கு ஆதரவளிப்பதற்காக 450 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும்.
பருவநிலை மாற்றம் தொடர்பான ஆணைக்குழு
பருவநிலை மாற்றம் தொடர்பான ஆணைக்குழு விரைவில் ஸ்தாபிக்கப்படும்.
பருவநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்காக கொத்மலை பகுதியில் 600 ஏக்கர் காணி ஒதுக்கப்படவுள்ளது.” என்றார்.