பிரபல ஹிந்தி நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு: சந்தேக நபர்கள் கைது
மும்பையின் (Mumbai) பாந்த்ராவில் உள்ள பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானின் (Salman Khan) வீட்டின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் பூஜ் பகுதியில் வைத்து குறித்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம்
சல்மான் கானின் மும்பையில் உள்ள வீட்டின் முன்பாக கடந்த 14 ஆம் திகதி இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியிருந்தனர்.
#WATCH | Mumbai, Maharashtra: Visuals from outside actor Salman Khan's residence in Bandra where two unidentified men opened fire this morning.
— ANI (@ANI) April 14, 2024
Police and forensic team present on the spot. pic.twitter.com/5vMmoXbI22
இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, சல்மான் கான் வீட்டிற்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இந்த நிலையில், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த காவல்துறையினர் இரண்டு சந்தேக நபர்களை குஜராத் மாநிலத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மும்பை அருகில் உள்ள பன்வெல் எனும் இடத்தில் 15 நாள்கள் தங்கி இருந்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளமை முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்த லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) கூட்டாளிகள் கனடாவில் (Canada) சதித்திட்டம் தீட்டி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அத்துடன், சல்மான் கானை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |