அரச பேருந்தொன்றின் பயங்கர விபத்து: பலர் வைத்தியசாலையில்..
நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் அரச பேருந்து மோதியதில் நடத்துனர் உட்பட பத்து பேர் பொல்பித்திகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொல்பித்திகம, ரம்பகொடெல்ல என்ற இடத்தில் லொறி ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குருநாகலிலிருந்து மடகல்ல நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேரூந்து அதன் பின்னால் அதிவேகமாக வந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொல்பித்திகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்போது, நடத்துனர் மற்றும் மற்றுமொரு பயணியின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அந்த இருவர் மற்றும் மேலும் இரு பயணிகளும் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
