இறுதி இலக்கை அடைந்த ஆதித்யா எல்-1: இந்தியா படைத்த அடுத்த சாதனை
புதிய இணைப்பு
விண்கலம் இறுதி இலக்கான எல்.1 புள்ளியை அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 127 நாட்களுக்கு பின்னர் மேற்கொண்டு ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை இலக்கில் சரியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றி மூலம் சூரியன் குறித்த ஆய்வு செய்யும் துறையில் புதிய மைல் கல்லை இஸ்ரோ நிகழ்த்தி சாதனை படைத்துள்ளது.
முதல் இணைப்பு
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், இன்னும் சில மணி நேரங்களில் இறுதி இலக்கான எல்-1 புள்ளியை அடைய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனுக்கு அதிக அளவு ஈர்ப்பு விசை உள்ளது பூமிக்கு இதனை விட குறைவான ஈர்ப்பு விசையே உள்ளது. எனவே இந்த இரண்டு ஈர்ப்பு விசைகளும் குறைவாக இருக்கும் இடம்தான் எல்-1 புள்ளி எனப்படுகிறது.
முதன் முதலாக சூரியனை ஆய்வு செய்யவதற்காக இந்தியா, ஆதித்யா எல்-1 எனும் விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் திகதியன்று அனுப்பியது.
ஆதித்யா எல்-1
எல்-1 பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிமீ (932,000 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது, இது பூமி-சூரியன் தூரத்தில் 1% ஆகும். விண்கலம் தனது இலக்கை அடையும் தூரத்தை ஏற்கனவே கடந்துவிட்டதாக இஸ்ரோ சமீபத்தில் கூறியது.
127 நாட்கள் பயணத்திற்கு பின்னர் இன்று(6) ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியில் நிலை நிறுத்தப்படவுள்ளது. ஆதித்யா-எல்1 இந்த "நிலைப்புள்ளியை" அடைந்தவுடன் அது பூமியின் அதே வேகத்தில் சூரியனைச் சுற்றிவர முடியும்.
மேலும் இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து, கிரகணங்கள் மற்றும் மறைவுகளின் போது கூட சூரியனைத் தொடர்ந்து பார்க்கவும், அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் முடியும்.
சூரியனை ஆய்வு செய்யும் பணி
கடந்த மாதம் நிறுவனம் 200 முதல் 400 நானோமீட்டர்கள் வரையிலான அலைநீளங்களில் சூரியனின் முதல் முழு-வட்டுப் படங்களை வெளியிட்டது இஸ்ரோ இந்த பணியின் செலவு பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை, ஆனால் இந்திய ஊடகங்கள் 3.78 பில்லியன் ரூபாய் என்று கூறுகின்றன.
இன்று சூரியனை ஆய்வு செய்யும் பணியில் வெற்றி பெற்றால், ஏற்கனவே சூரியனைப் பற்றி ஆய்வு செய்து வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |