செயற்கை சூரியனை உருவாக்க தீவிரமாக களமிறங்கியுள்ள சீனா!
செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை அடுத்து தற்போது சீனாவும் களமிறங்கியுள்ளது.
அந்தவகையில் சீனாவின் இந்த செயற்கைச் சூரியனை உருவாக்கும் திட்டத்தினை எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குள் தயார்படுத்தி முடிப்பதற்கு சீன அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செயற்கை சூரியன் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அணுக்கரு இணைவுத் தொழில்நுட்பம்
உண்மையான சூரியனைக் காட்டிலும் 7 மடங்கு அதிக வெப்பமாக இந்த சூரியன் உருவாக்கப்படவுள்ளது.
சீன அரசானது இந்த செயற்கை சூரியனை அணுக்கரு இணைவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், உருவாக்க உள்ளது.
தேசிய முன்னுரிமையின் அடிப்படையில் அணுக்கரு இணைவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த செயற்கை சூரியனை சீனா உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த செயற்கை சூரியனின் மூலமாக உலகம் முழுவதும் நிலவும் எரிசக்தி சவால்களுக்கு ஒரு சிறந்த தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.
பாரிய வர்த்தக உற்பத்தி
அந்த வகையில் சீனாவின் அரசு நிறுவனமான சீனா தேசிய அணுசக்தி கூட்டுத்தாபனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டமானது 2035-ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா உட்பட பல நாடுகளும் செயற்கை சூரியனை உருவாக்குவதில் மும்முரமாக செயற்பட்டு வருகிறது.
2035 ஆம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனின் முன்மாதிரியை உருவாக்கி, 2050ஆம் ஆண்டுக்குள் அதனை பாரிய அளவிலான வர்த்தக உற்பத்தியாக ஆரம்பிக்கவும் சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவும் அமெரிக்காவும் இந்த விடயத்தில் மிக வேகமாக செயற்பட்டு வரும் நிலையில், சீன அரசும் இப்போது இந்தப் பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |