நாளை மீண்டும் ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை : மேற்பார்வையாளர்கள் குறித்து வெளியான அறிவிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தர பரீட்சை நாளையதினம் (03) மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஒரே கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து நியமிக்கப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) தெரிவித்துள்ளது.
கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பல பரீட்சை மேற்பார்வையாளர்கள் ஒரே கல்வி வலயத்திற்குள் நடைபெறும் பரீட்சைகளுக்கு மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
பரீட்சை மேற்பார்வையாளர்
பரீட்சை விதிமுறைகளின்படி, ஒரே கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து பரீட்சை மேற்பார்வையாளர்களை நியமிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் சட்டவிரோதமானது என்று ஸ்டாலின் கூறினார்.
பரீட்சை மோசடியின் ஒரு வடிவம்
இவ்விடயம் தொடர்பில் பரீட்சை திணைக்களத்திடம் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், இந்த பரீட்சை மேற்பார்வையாளர்களை நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
இந்த நடைமுறையானது பரீட்சை மோசடியின் ஒரு வடிவமாகவே கருதப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |