மக்களைக்காப்பாற்றவே மதுபானசாலைகள் திறப்பு -ஆளும் தரப்பு எம்.பி விளக்கம்
people
open
bar
disanayakke
By Sumithiran
மக்களைக் காப்பாற்றவே மதுபானசாலைகள் திறக்கப்பட்டதாக ஆளும் தரப்பின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதுக்கடைகள் மூடப்பட்ட போது பொதுமக்கள் பல்வேறு சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டதால் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு மற்றும் கொவிட் தொற்றுநோயால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் கிராம அளவில் விஷ மது உற்பத்தியில் இருந்து மக்களை காப்பாற்றுவதே இதன் முக்கிய நோக்கம் என்றார்.
கொவிட் சூழ்நிலையால் சட்டவிரோத மதுபானங்களை அடக்குவது கடினம் என்பதால் மதுக்கடையைத் திறக்க முடிவு செய்தது யார் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.