தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் அணிதிரண்டு போராட்டம்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி இன்று காலை யாழில் மாபெரும் கவனவீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம் நல்லூர் பின் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை கொல்லாதே, விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய் , அரசியல் கைதிகளும் மனிதர்களே, சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா ? உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இதன்போது எழுப்பியிருந்தனர்.
போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 13 மணி நேரம் முன்