ஆப்கானில் இடம்பெற்ற தாக்குதல் -இலங்கை அரசு கடும் கண்டனம்
srilanka
attack
afghan
By Sumithiran
ஆப்கானிஸ்தானில் உள்ள லோகர் மாகாணத்தின் புல்-இ-ஆலம் நகரில் 2021 ஏப்ரல் 30ஆம் திகதி இடம்பெற்ற பொதுமக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான கண்மூடித்தனமான வன்முறையானது, அமைதியின்மையைக் கொண்டுவர விரும்பும் குற்றவாளிகளின் கொடூரத்தன்மையை நிரூபிப்பதாக அமைகின்றது.
நாட்டில் நீடித்த அமைதியைக் கொண்டுவருவதற்கான பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் உறுதியாக இணைந்து நிற்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்