ஆப்கானில் பள்ளிவாசல்களில் தொடரும் குண்டுவெடிப்பு
death
afghanistan
bomb blast
By Jaso
ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
நங்கர்ஹாரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த சம்பத்தில் 12 பேர் காயமடைந்தனர். உடனடியாக காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இம்மாத தொடக்கத்தில் ஆப்கான் தலைநகர் காபூலிலுள்ள இராணுவ மருத்துவமனையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் 19 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.