விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு - 10 பேர் பலி! ஆப்கானில் சம்பவம்
ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள இராணுவ விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேசையின் கீழ் வெடிகுண்டு வைப்பு
தகாரில் உள்ள தலிபான் பாதுகாப்புத் தளபதி அப்துல் முபின் சஃபி, குண்டுவெடிப்புச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், உள்ளூர் நிர்வாக ஊழியர்களின் மேசையின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில், போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அடுத்தடுத்து குண்டு வெடிப்பு
தாலுகான் நகரில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்களில் தற்போது மேலும் ஒரு குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
