ஆப்கானில் பறிக்கப்பட்ட பெண்களின் கல்வி உரிமை-அனைத்தும் இருளென மாணவி விபரிப்பு
ஆப்கானிஸ்தானில் மாணவிகள் எவருமின்றி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னணியில், தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு ஆண் மாணவர்களையும், ஆண் ஆசிரியர்களையும் மாத்திரம் சமூகமளிக்குமாறு தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், பெண்களுக்கான கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பாடசாலை மாணவியொருவர் BBC செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.அனைத்தும் இருளாகியுள்ளதாக அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தலிபான்கள் பதிலளித்துள்ளனர். மகளிர் பாடசாலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தலிபான் ஊடகப் பேச்சாளர், BBC க்கு தெரிவித்துள்ளார்.
எனினும், ஆப்கானிஸ்தான் மீண்டும் 1990களை நோக்கி திரும்பும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.