நெதர்லாந்தில் ஆப்கானியர்களை விரட்டி அடிக்க முயற்சி- காப்பாற்றிய மோப்ப நாய்கள்!
ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 800 பேர் நெதர்லாந்தின் Harskamp இராணுவ முகாமில் தங்க வைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அகதிகளின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து Harskamp-ல் உள்ள இராணுவ முகாமின் வரவேற்பு மையத்திற்கு வெளியே சுமார் 250 போராட்டக்காரர்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில்ல மேலும் தெரியவருகையில்,
ஆப்கானிஸ்தானிலிருந்து முதல் கட்டமாக வெளியேற்றப்பட்டவர்கள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நெதர்லாந்து சென்றடைந்துள்ளனர். நெதர்லாந்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியவர்களுக்காக நான்கு அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் Harskamp-ல் உள்ள ராணுவ முகாமும் ஒன்று. அங்கு 800 ஆப்கானிஸ்தான் அகதிகள்களை தங்க வைப்பதற்காக ஏற்றபாடு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்தனர். இதன் போது நெதர்லாந்து Utrecht-க்கு கிழக்கே உள்ள கிராமமான Harskamp-ல் மக்கள் பெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டம் முதலில் அமைதியாக இடம்பெற்றிருந்தாலும், அந்நாட்டு பொலிஸாரால் கலைந்து செல்லுமாறு விடுக்கப்பட்ட அறிவிப்புகளை இளைஞர்கள் பலர் புறக்கணித்ததால் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், சில போராட்டகாரர்கள் தேசியவாத பாடல்களைப் பாடி, எதிர்ப்பு பதாகைகளைக் காட்டி வரவேற்பு மையத்தின் முன் டயர்களை கொளுத்தினர்.
அதையடுத்து, சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் விரைந்த பொலிஸ் அதிகாரிகள், போராட்டத்தை கலைத்து போராட்டக்காரர்களை அப்பகுதியை விட்டு விரட்டி அனுப்பினர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.
சொந்த நாட்டில் வாழ முடியாத சூழலால், வாழ்வாதாரம் தேடி அகதிகளாக வேறு நாட்டிற்குள் தஞ்சமடையும் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இத்தகைய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.