ஆப்கானிஸ்தானில் ஆண்களுக்கு ஏற்பட்ட சிக்கல் - தலிபான்கள் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
government
peoples
afghanistan
gentleman
saloons
By S P Thas
ஆப்கானிஸ்தானில் ஆண்கள் தமது தாடி, மீசைகளை முற்றாக மழிப்பதையும் குறைப்பதையும் தவிர்க்குமாறு ஆப்கானின் ஹெல்மண்ட் மாகாண சிகையலங்கார நிலையங்களுக்கு தலிபான் அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தாடி மற்றும் மீசை முற்றாக மழிப்பது இஸ்லாமிய சட்டத்திற்கு முரணானது எனவும் இந்த உத்தரவை மீறுவோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமக்கு இப்படியான உத்தரவு கிடைத்துள்ளதாக தலைநகர் காபூலில் உள்ள சலூன் உரிமையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
தலை முடி மற்றும் தாடிகளை மழிக்கும் அமெரிக்க முறையில் இருந்து மாறுமாறும் தலிபான் அமைப்பு சலூன்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.