ஆப்கான் பாலைவனத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித தலைகள்
people
afghanistan
taliban
desert
By Sumithiran
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அவர்களிடமிருந்த தப்புவதற்கு அந்நாட்டு மக்கள் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலைவனம் வழியாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தலிபான் ஆட்சியைப் பிடித்ததால் உயிருக்கு பயந்துள்ள ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டு எல்லையைக் கடந்து பாகிஸ்தானில் உள்ள நிம்ரூஸ் பாலைவனம் வழியாக ஈரான் நாட்டுக்கு புலம்பெயர்ந்தோராகச் செல்கின்றனர்.
இங்கிருந்து அவர்கள் ஐரோப்பா செல்லலாம் என கூறப்படுகிறது. கண்ணுக்கு எட்டியவரை மனிதத் தலைகளே தென்படுவதால் இதனைப் பேரவலம் என்று ஐரோப்பிய எம்பிக்கள் கூறியுள்ளனர்.