இரண்டாக பிளக்கும் ஆபிரிக்கா கண்டம்: பூகோள அமைப்பில் வியத்தகு மாற்றம்
ஆபிரிக்கா கண்டம் இரண்டாக பிரிய தொடங்கியுள்ளதென அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் உருவாகும் புதிய மலைகள் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா என்பன காஷ்மீர் போல குளிர் பிரதேசங்களாக மாறுமெனவும் இந்த சம்பவம் உலகில் மிக மிக அரிதாக நடக்கும் சம்பவமெனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு காலத்தில் வேறு வேறு தோற்றத்தில் இருந்த நிலப்பரப்புகள் நிலநடுக்கம், சுனாமி, நில அடுக்கு நகர்வுகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் காரணமாக உருமாற்றம் அடைந்து தற்போது இருக்கும் தோற்றத்தை பெற்றுள்ளது.
நிலப்பரப்புகள்
இதன் காரணமாகவே வேறு வேறு நிலப்பரப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி தற்போது இருக்கும் ஏழு கண்டங்கள் உருவாகியதுடன் நிலப்பரப்புகள் மோதியதால் மட்டுமே தற்போது இருக்கும் பல்வேறு மலைகளும் தோன்றின.
அந்த வகையில் தற்போது இருக்கும் ஆபிரிக்கா கண்டம் பிரிய தொடங்கி உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளதுடன் இது இரண்டாக கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலப்பரப்பு பிரியும் பகுதியில் நீர் புகுந்து அங்கே பெரிய கடல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் மற்றும் தற்போது ஆபிரிக்கா கண்டத்தில் இருக்கும் ஸாம்பியா மற்றும் உகாண்டா பிரிந்து சென்று இடையில் கடல் பகுதிகள் வரலாமென்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தட்டுகள்
ஒரு நில அடுக்கு பிரிந்து இரண்டாக, மூன்றாக அல்லது அதற்கும் மேலாக மாறுவதை ரிப்ட் என்று கூறுவதுடன் ஒரு தட்டு உடைந்து இரண்டாக மாறி இடையில் தண்ணீர் புகுந்தால் அது இரண்டு நாடுகளாக அல்லது இரண்டு பகுதிகளாக மாறிவிடும்.
இந்நிலையில் இரண்டு தட்டுகள் நகர பல நூறு ஆண்டுகள் எடுக்கும் ஆனால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இந்த நகர்வு வேகமாக நடக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
இப்படி தட்டுகள் நகரும் இடைப்பட்ட இடைவெளியில் பொதுவாக கடல் நீர் நுழைந்து கடல் உருவாவதுடன் தற்போது கிழக்கு ஆபிரிக்காவில் இந்த ரிப்ட் ஏற்பட்டு உள்ளது.
செயற்கைக்கோள்
அதன்படி 56 கிலோமீற்றர் தூரத்திற்கு நில தட்டுகள் நகர்ந்து உள்ளதோடு எத்தியோப்பியா பாலைவனத்தில் இந்த நில பிரிவு ஏற்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் வரும் வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது கடலாக மாறுவதுடன் இங்கே இருக்கும் மூன்று நில அடுக்குகள் ஏற்கனவே பிரிய தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்கா நுபியன், ஆபிரிக்கா சோமாலி, அரேபியன் ஆகிய அடுக்குகள் பிரிய தொடங்கி உள்ளதுடன் இவை செயற்கைக்கோளில்(Satellite) மட்டுமன்றி கண்ணால் பார்க்கும் அளவிற்கு பிளவு தென்பட தொடங்கியுள்ளது.
நிலநடுக்கங்கள்
இதனால் ஆபிரிக்கா கண்டத்தின் ஒரு பகுதி இந்தியாவின் அரபிக்கடல் பகுதியில் இருக்கும் மாநிலங்களோடு மோதுவதனால் உருவாகும் புதிய மலைகள் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகியன குளிர் பிரதேசங்களாக மாறும்.
இவை எல்லாம் நடக்க சில இலட்ச வருடங்கள் ஆவதுடன் தற்போது ஆபிரிக்கா கண்டத்தில் இருக்கும் ஸாம்பியா மற்றும் உகாண்டா பிரிந்து சென்று இடையில் கடல் பகுதிகள் வரலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது மொத்தமாக பிரிய இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆவதுடன் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இது வேகமாக நடக்கலாம் எனவும் அடுத்த 50,000 வருடத்தில் இந்தப் புதிய கடல் தோன்ற வாய்ப்பில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொஞ்சம் கொஞ்சமாகவே இது நடக்குமெனவும் ஏதாவது மிகப்பெரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி எல்லாம் ஒரே நாளில் ஏற்பட்டால் திடீர் மாற்றங்கள் இதில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |