கோட்டாபய உட்பட 82 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!
சிறிலங்கா அரச தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சரவையை தடை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை தொழி நிபுணர்களின் தேசிய முன்னணியின் செயலாளர் கபில ரோணுக (Kapila Ronuka), சட்டத்தரணி தர்சன வேரதுவகே (Tarcana veratuvake) தாக்கல் செய்துள்ளனர்.
தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் அரச தலைவரால் தற்போது நியமித்துள்ள அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள விதம் அரசியலமைப்புச் சட்டத்தின் 47(1) (அ) மற்றும் (ஆ) ஆகிய சரத்துக்களுக்கு முரணானது என கூறப்பட்டுள்ளது.
அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) சார்பில் சட்டமா அதிபர், பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) உட்பட அமைச்சரவையின் பிரதிநிதிகள், இராஜாங்க அமைச்சர்கள், நிதியமைச்சின் செயலாளர் உட்பட 82 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக விதிக்கப்பட்டுள்ள வரையறை தாண்டி இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளதுடன் இந்த நியமனங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ளார்.