இலங்கையில் வயது கூடிய பெண்மணி கொவிட் தொற்றால் உயிரிழப்பு
இலங்கையில் வயது கூடிய பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
காலி மாவட்டத்தின் கிணிமெல்லகஹ பகுதியில் வசித்து வந்த 103 வயதான ஒரு பிள்ளையின் தாயான வயோதிப மூதாட்டியே உயிரிழந்தவராவார். இவர் கொவிட் நியூமோனியா நிலைமையினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்
. கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பெண்ணின் குடும்பத்தார் மற்றும் அவருடன் நெருங்கி பழகியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.