சவூதி அரேபிய அல் நசார் கழகத்துடனான ஒப்பந்தம் - காரணத்தை கூறிய ரொனால்டோ!
உதைபந்தாட்டத்தை மட்டுமல்ல இன்னும் ஏராளமான நல்ல விஷயங்களை மேம்படுத்தவே ஆசிய கழகமான அல் நசாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டேன் என நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
அல் நசார் சவூதி அரேபிய கழகத்தின் வரவேற்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது ரொனால்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
அல் நசாருடன் ஒப்பந்தம்
பிரேசில், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, போர்த்துக்கல் போன்ற உதைபந்தாட்ட அணிகளில் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகள் வந்தாலும் நான் ஒப்பந்தம் செய்யவில்லை என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய மண்ணில், ஐரோப்பிய அணிகளில் சாதித்தவைகள் அதிகம், அவை அனைத்தும் நிறைவுபெற்றுவிட்டன, புதிய சவால்களை எதிர்கொண்டு ஏராளமான நல்ல விஷயங்களை மேம்படுத்தவே நான் ஆசிய அணியான அல் நசாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
