விவசாய அமைச்சின் செயலர் இராஜினாமா
mahindanda aluthgamahe
agri-ministry
By Vanan
விவசாயத் துறை அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமார இராஜினாமா செய்துள்ளார்.
இரசாயன உர இறக்குமதிக்கான தடை மற்றும் காபன் உர இறக்குமதி குறித்து எழுந்து முரண்பாட்டினால் அவர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் புஸ்பகுமார தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நாவலபிட்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.
காபனி உரம் தொடர்பில் அறிவு அனுபவமுள்ள ஒருவர் விரைவில் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படுவார் என அவர் கூறினார்.
ஏற்கனவே விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக இருந்த மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா இராஜினாமா செய்திருந்த நிலையில் அந்த இடத்திற்கு புஸ்பகுமார நியமிக்கப்பட்டு தற்போது அவரும் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்