பிறந்த நாளன்று விவசாய ஆராய்ச்சி அலுவலருக்கு நிகழ்ந்த துயரம்
விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அதிகாரி ஒருவர் பாம்பு கடித்ததில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிரில்ல விவசாய சேவை நிலையத்தில் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அதிகாரியாக கடமையாற்றிய எச்.எம். சுனேத்ரா ஹேரத் (50) இரண்டு பிள்ளைகளின் தந்தை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பயிரை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க
வீட்டிலிருந்து இரண்டரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள நிக்கவெரட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹிந்தம்பல பிரதேசத்தில் உயிரிழந்தவரின் நான்கு ஏக்கர் பயிரிடப்பட்ட காணிக்கு காட்டு விலங்குகள் மற்றும் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின் விளக்குகளை ஏற்றிச் சென்ற போது நேற்று இரவு இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
ஐம்பதாவது பிறந்தநாள்
இறந்தவரின் ஐம்பதாவது பிறந்தநாள் நேற்று( 01ஆம் திகதி) ஆகும் இரவு உணவு சமைத்துவிட்டு வயல்வெளிக்குச் சென்ற கணவருக்காக மனைவி காத்திருந்த போது, இரவு 8.30 மணியளவில் இறந்தவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர் .
அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பார்த்தபோது, காலில் இரத்தக் காயத்துடன் வயலில் கிடந்தவர், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 119 சுவ சரியா நோயாளர் காவு வண்டி வந்து பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சடலம் நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |