37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இலங்கையில்
United Nations
Colombo
Sri Lanka
By Shadhu Shanker
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த மாநாடு இன்று (19) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இன்று ஆரம்பமாகியுள்ள மாநாடு எதிர் வரும் 22ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
விவசாய மாநாடு
இந்த மாநாட்டில் 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கியூ டோங்யு உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்