வெளிநாடொன்றில் காலநிலையை முன்கூட்டியே கணிக்கும் செயற்கை நுண்ணறிவு!
சீனாவில் (China) வானிலை மற்றும் காலநிலைகளை முன்கூட்டியே கணிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், "FuXi-Subseasonal," என்ற பெயருடைய குறித்த செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பமானது, ஷாங்காய் அகடமி ஓஃப் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போர் சயன்ஸ் (SAIS), ஃபுடான் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் தேசிய காலநிலை மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, uXi-Subseasonal மாதிரியானது காலநிலை முன்னறிவிப்புகளில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி, வேகமாக, மற்றும் துல்லியமாக முன்னறிவிப்புகளை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
[SHFBNVU ]
காலநிலை அறிக்கை
குறிப்பாக, 36 நாட்களுக்கு முன்பதாகவே வானிலை மற்றும் காலநிலை அறிக்கைகளை மிகத்துல்லியமாக கணிப்பதால் பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைகளை மக்களுக்கு இலகுவாக வழங்க முடிகிறதாக "FuXi-Subseasonal" ஆராய்ச்சி குழுவின் பொறுப்பான விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், காற்றின் வேகம், வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றை கணிக்கக் கூடிய Fengwu எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஒன்றும் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |