இஸ்ரேலில் உக்கிரமடையும் போர் பதற்றம்! ஏர் இந்தியா விமான சேவை ரத்து
இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்-க்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரத்திற்கு ஐந்து முறை இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே விமான சேவை இயக்கப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து டெல் அவிவ்-க்கு செல்லும் ஏர் இந்தியாவின் ஏ.ஐ. 139 விமானமும், டெல் அவிவ்-இல் இருந்து டெல்லி வரும் ஏ.ஐ. 140 விமானமும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் நலன் கருதி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக
காசா எல்லை பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹமஸ், இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது இந்த தாக்குதலால் இஸ்ரேலில் போர் துவங்கி இருக்கிறது.

போர் காரணமாக நிலவும் அசாதாரண சூழ்நிலையினால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.