யாழ் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு : விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண்ணானது இன்றைய தினம் (09) சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் நீடிக்கலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRO) சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது.
தற்போதைய காலநிலை மற்றும் நாட்டுக்கு வடக்கு திசையிலிருந்து வரும் காற்றின் தன்மை என்பவற்றின் காரணமாக நாடு முழுவதும் காற்றின் தரச்சுட்டெண் 90 முதல் 180 வரையான மட்டத்தில் இன்றைய தினம் காணப்படக்கூடும்.
யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் பொலன்னறுவை (Polonnaruwa) நகரங்களில் காற்றின் தர சுட்டெண் ஆரோக்கியமற்ற மட்டத்தில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காற்றின் தர சுட்டெண்
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சுவாச ரீதியான பாதிப்புகளைக் கொண்டுள்ளவர்கள் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம், நுவரெலியா, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் மாத்திரம் இன்றைய தினம் காற்று தரச்சுட்டெண் மத்திம மட்டத்தில் நிலவும் எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |