காணாமல் போன விமானம்: சடலமாக மீட்கப்பட்ட மலாவி துணை அதிபர்
புதிய இணைப்பு
மலாவியின்(Malawi) துணை அதிபர் சௌலோஸ் சிலிமா(Saulos Chilima) மற்றும் அவரது மனைவி உட்பட 9 பேர், அவர்கள் பயணம் செய்த விமானம் சிக்கங்காவா மலைத்தொடரில் விழுந்து நொறுங்கியதில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்றையதினம்(11) அங்கு துக்கதினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
சிலிமாவும் மற்ற பயணிகளும் நாட்டின் முன்னாள் அட்டர்னி ஜெனரலின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றபோது, அவர்களது விமானம் ராடாரில் இருந்து கீழே விழுந்துள்ளது.
தலைநகருக்கு வடக்கே சுமார் 200 மைல் தொலைவில் உள்ள Mzuzu விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முடியவில்லை என்றும், விமானம் காணாமல் போனதும் லிலாங்வேக்குத் திரும்பும்படி விமானிக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் இணைப்பு
மலாவியின் (Malawi) துணை அதிபர் சவுலோஸ் சிலிமாவை (Saulos Chilima) ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் காணாமல் போனதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உடனடி தேடல்
காணாமல் போன குறித்த விமானத்தில் மலாவியின் துணை அதிபரான 51 வயதான சிலிமா மற்றும் 9 பேர் பயணித்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மலாவியின் அதிபர் லாசரஸ் சக்வேரா (Lazarus Chakwera) பிராந்திய மற்றும் தேசியப் படைகளுக்கு விமானம் இருக்கும் இடத்தைக் கண்டறிய உடனடி தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதிபரின் பயணம் ரத்து
மேலும், பணி நிமித்தமாக பஹாமாஸ் நாட்டிற்கு செல்லவிருந்த அதிபர் சக்வேரா தனது பயணத்தையும் ரத்து செய்துள்ளதாக தெரிக்கப்படுகிறது.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ்-மலாவிய தொழிலதிபர் சம்பந்தப்பட்ட இலஞ்ச ஊழலில் ஊழல் செய்ததாகக் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டபோது துணை அதிபர் சிலிமாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |