விமான நிலையங்கள் மூடப்படமாட்டாது! பிரசன்ன ரணதுங்க தகவல்
தற்போதைய நிலையில், நாட்டில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், விமான நிலையங்களை மூட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் விமான நிலையங்களை மூடினால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களால் நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்பை இல்லாமல் போகலாம்.
எனவே சுகாதார வழிகாட்டுதல்களின்படி விமான நிலையங்கள் செயல்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பல நாடுகள் தற்காலிகமாகவே இலங்கைக்கு பயணத் தடையை விதித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். சில நாடுகள் பயணத்தை நிறுத்தி வைத்துள்ளன, இலங்கையர்களும் சில நாடுகளுக்கு பயணிக்க முடியாது.
குவைத் மற்றும் துபாய் போன்ற நாடுகள் இலங்கை மற்றும் ஆசியாவின் பல நாடுகளில் இருந்து விமானங்களை நிறுத்தியுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்