இலங்கை முழுவதும் விசேட தேடுதல்! 13,320 வழக்குகள் பதிவு
மோட்டார் சைக்கிள்கள் மூலம் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க கடந்த 72 மணி நேரத்தில் நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதில் வீதியில் பயன்படுத்த தகுதியற்ற 450 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார். மேலும் இந்த காலக்கட்டத்தில் 13,320 வழக்குகள் பதியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர்களில் குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் 398 பேர், அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 129 பேர், அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 108 பேர், ஹெல்மெட் இல்லாத மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 1977 பேர், உரிமக் குற்றங்களுக்காக 1303 நபர்கள், போக்குவரத்து குற்றங்களுக்கு 2806 மற்றும் போக்குவரத்து குற்றங்களுக்கு 2806 பேர் பிடிப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.