இலங்கையில் 24 மணி நேரத்தில் 428 பேர் கைது!
srilanka
police
arrested
ajith rohana
peoples
By S P Thas
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 428 பேர் கடந்த 24 மணிநேரத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலானோர் கண்டி,மாத்தளை,கம்பளை ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் 93 பேரும், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 77 பேரும், கம்பளை பகுதியைச் சேர்ந்த 58 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை மொத்தமாக 44,644 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோர் தொடர்பில் தொடர்ந்தும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி