வெளி மாகாணங்களை சேர்ந்தவர்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!
வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் எவரையும் ஹோட்டல்களில் தங்க வைக்க வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.
ஹோட்டல்கள், விடுதிகளில் வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு உத்தரவிற்கு அமைய இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண எல்லைப் பகுதிகளில் குறிப்பாக மாகாணங்களுக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தும் நோக்கில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
பயணக்கட்டுப்பாடுகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதனை கண்காணிப்பதற்கு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.