ஐரோப்பிய லீமேன்ஸ் கார் பந்தயம் : விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்தின் கார்!
ஐரோப்பாவில் நடைபெறும் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் அஜித் குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை எனவும் அவர் முழுமையான பாதுகாப்புடன் உள்ளார் எனவும் அவரது அணியினர் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயம் நடைபெற்றுவரும் நிலையில் இந்த போட்டியில் நடிகர் அஜித் குமார் தனது அணியுடன் பங்கேற்றார்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து
போட்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருந்த போது அஜித்தின் கார் எதிர்பாராதவிதமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, காரில் சக்கரங்கள் செயலிழந்ததுடன் அடுத்தடுத்து தீவிர தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரின் முன்பகுதி சேதமடைந்தபோதிலும், நவீன பந்தயக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் அஜித்தைக் காப்பாற்றியதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்தநிலையில் அவர் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகப் பாதுகாப்பாக காரில் இருந்து வெளியேறியதாகவும் தொடர்ந்து அவர் பந்தயத்தில் பங்கேற்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |