அட்சய திருதியையன்று அதிர்ஷ்டம் வந்து சேர எந்த நிறங்களை பயன்படுத்த வேண்டும் தெரியுமா!
அட்சய திருதியை நன்நாளில் நாம் செய்யும் சில குறிப்பிட்ட விடயங்கள் நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும என்பது ஐதீகம்.
இந்த நாளில் தொடங்கும் எதுவும் எப்போதும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை என்பதோடு, இந்த நாள் நல்ல அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் அதிர்ஷ்ட ஆதாயங்களின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.
மேலும், அட்சய திருதியை என்றால் வளர்க என்று பொருள் அதனால் அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை
அட்சய திருதியை சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 10ம்திகதி காலை 4.17 மணிக்கு திரிதியை திகதி தொடங்குகிறது.மே 11ஆம் திகதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும்.
அட்சய திருதியை நாளில் வாங்கும் பொருள், செய்யப்படும் காரியங்கள், நாம் செய்யும் வழிபாடுகள் பலன் தரக் கூடியதாக இருப்பது போல் அட்சய திருதியை அன்று நாம் பயன்படுத்தும் சில குறிப்பிட்ட நிறங்கள் நமக்கு பணத்தை ஈர்த்து, செல்வ செழிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
அந்தவகையில், அட்சய திருதியையன்று என்னென்ன நிறங்களை பயன்படுத்தலாம், இந்த நிறங்களின் தன்மை என்ன, இவை தரும் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
நிறத்தின் முக்கியத்துவம்
இந்து மத சாஸ்திரங்களின் படி நிறங்கள் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன. அதன்படி நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தன்மை, குணம் உண்டு. இதனாலேயே ஒவ்வொரு தெய்வத்திற்கும், ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு நிறம் குறிப்பிடப்படுகிறது.
அறிவியல் ரீதியாக நம்முடைய உடலுக்கும் நிறங்களை ஈர்த்து, வெளியிடும் தன்மை உள்ளது. இந்தவகையில் அட்சயதிருதியையன்று எந்த நிறத்தை பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
எந்த நிறத்தை பயன்படுத்தலாம்
சிவப்பு - சிவப்பு நிறமானது லட்சியம், ஆசை, நிலை தன்மை, இலக்குகளை அடைதல், உறுதித் தன்மை, மனஉறுதி ஆகியவற்றை தரக் கூடியதாகும்.
சிவப்பு நிறம், மூலாதார சக்கரத்துடன் தொடர்புடைய நிறமாகும். அதனாலேயே துர்க்கைக்கு உரிய நிறமாக சிவப்பு குறிப்பிடப்படுகிறது. சிவப்பு நிற குங்குமத்தை நெற்றியில் வைப்பதற்கு காரணமும் இது தான்.
செம்மஞ்சள் - செம்மஞ்சள் நிறமானது சுதந்திரம், வெற்றி, புதிய வாய்ப்புகள், சகிப்புத்தன்மை, வேகம், சாதனை, முதலீடு ஆகியவற்றுடன் தொடர்புடைய நிறமாகும். இது சுவாதிஸ்தான சக்கரத்துடன் தொடர்புடைய நிறமாகும். பொதுவாக நம்முடைய உடலில் கீழ் பகுதியில் இருக்கும் 3 சக்கரங்கள் தான் பணம் மற்றும் பாதுகாப்பிற்கு காரணமான சக்கரங்களாக இருக்கின்றன.
பச்சை - பச்சை நிறம் இயற்கை, புத்துணர்ச்சி, பாதுகாப்பு, ஒற்றுமை, நல்வாழ்வு, வளர்ச்சி, செழிப்பு, அதிகம் கொடுப்பது, அதிகம் பெறுவது ஆகியவற்றை குறிக்கும் நிறமாகும். இது இதய சக்கரத்துடன் தொடர்புடைய நிறமாகும்.
ஊதா - ஊதா நிறமானது தலையில் உள்ள சக்ரத்துடன் தொடர்புடைய நிறமாகும். இது கெளரவம், ஆடம்பரம், தலைமை, செல்வம், ஞானத்தின் அதிர்வுகளை குறிக்கும் நிறமாகும். இது தியானத்துடன் தொடர்புடைய நிறமாகவம் சொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |