உக்கிரமடைந்துள்ள இஸ்ரேல் ஹமாஸ் போர்: தரைமட்டமாகிய காசா பல்கலைக்கழகம்
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் காசாவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழத்தின் மீது தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கியுள்ளது.
குறித்த தாக்குதலில், 12 பேர் பலியாகியுள்ளதோடு, 50 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
வான் வழியாக தரை வழியாக கடல் வழியாக என இஸ்ரேல் இராணுவப்படையின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அல்-அசார் பல்கலைக்கழகம்
இந்நிலையில், 1991ம் ஆண்டு காசாவில் நிறுவப்பட்ட அல்-அசார் பல்கலைக்கழகத்தை இஸ்ரேல் இராணுவம் அழித்துள்ளது.
அந்த தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளதோடு, 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இடிபாடுகளுக்கு அடியில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், படுகாயமடைந்தவர்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் இராணுவம் எத்தகைய அறிக்கையையும் வெளியிடவில்லை.
The Al-Azhar University building in the Gaza Strip was completely destroyed, Palestinian media reported.
— NEXTA (@nexta_tv) November 4, 2023
The Israeli army has not officially commented on its involvement in the strike.
Al-Azhar University in Gaza was founded in 1991. pic.twitter.com/a1G2Yi8SEa
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 8 நிமிடங்கள் முன்