யாழ். நல்லூருக்கு செல்லும் வீதியிலும் புதிய மனிதப் புதைகுழிகள் - வெளியான அதிர வைக்கும் தகவல்

Jaffna Anura Kumara Dissanayaka Nallur Kandaswamy Kovil chemmani mass graves jaffna
By Rakesh Jun 29, 2026 02:29 AM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணி சோதனைச்சாவடிக்கு அருகாமையில் இருந்த கோயிலுக்கு முன்பாகவும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இன்னமும் கண்டறியப்படாத மனிதப் புதைகுழிகள் இருக்கக்கூடும் என திடுக்கிடும் தகவலை மரணதண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்‌ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

தன்னை ஒரு சுயாதீன சாட்சியாளராக விடுவித்துக்கொள்ளும் பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்‌ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்கிரம கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் சேவை! தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்

இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் சேவை! தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்

முறையான விசாரணை

அதனையடுத்து இது பற்றிய மேலதிக விவரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்‌ஷவை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் மீண்டும் இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்‌ஷவைச் சந்தித்தனர்.

யாழ். நல்லூருக்கு செல்லும் வீதியிலும் புதிய மனிதப் புதைகுழிகள் - வெளியான அதிர வைக்கும் தகவல் | Another Mass Grave On The Road To Nallur Jaffna

அச்சந்திப்பின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கான கடிதமொன்றைக் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் சோமரத்ன ராஜபக்‌ஷ கையளித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போது வரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்கா உருவாக்கும் புதிய கடல் வழித்தடம்! ஈரானின் பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்கா உருவாக்கும் புதிய கடல் வழித்தடம்! ஈரானின் பரபரப்பு குற்றச்சாட்டு

புதைகுழிகள் தொடர்பில் புதிய தகவல்

இவ்வாறானதொரு பின்னணியில் தனது மனைவியான சம்பா விஜேவிக்கிரம ஊடாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் புதிய தகவல்களை சோமரத்ன ராஜபக்‌ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ். நல்லூருக்கு செல்லும் வீதியிலும் புதிய மனிதப் புதைகுழிகள் - வெளியான அதிர வைக்கும் தகவல் | Another Mass Grave On The Road To Nallur Jaffna

சிறைச்சாலைக்குள் இருந்து இவை பற்றிய மேலதிக விவரங்களை வெளிப்படுத்தும் பட்சத்தில் தனது பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு கேள்விகள் காணப்படுகின்றன என்றும், எனவே தன்னை ஒரு சுயாதீன சாட்சியாளராக விடுவித்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

உக்ரைனின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ரஷ்யா! புடினின் அதிரடி அறிவிப்பு

உக்ரைனின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ரஷ்யா! புடினின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026