இந்த ஆண்டே தாய்நாடு திரும்புவேன் - ஷேக் ஹசீனா அதிரடி அறிவிப்பு
நான் இந்த ஆண்டே எனது தாய்நாட்டிற்குத் திரும்புவேன் என்று முன்னாள் பிரதமர் மற்றும் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா அதிரடியாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
நேர்காணலில் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்காளதேஷில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டங்களின் விளைவாக ஆட்சியை இழந்துஇ நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் மற்றும் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட அரசியல் ஆசை
பங்காளதேஷுக்கு திரும்புவது என்பது தனது தனிப்பட்ட அரசியல் ஆசைக்கானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள ஷேக் ஹசீனா, அது பங்காளதேஷ் மக்களின் அரசியல் உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுத்தல் மற்றும் விடுதலைப் போரின் உன்னத நோக்கம் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்றார்.

“நான் அதிகாரத்திற்காக அரசியல் செய்பவள் அல்ல. பங்காளதேஷ் மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் தந்தை பங்காபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 'சோனார் பங்களா' என்ற கனவை நனவாக்குவதற்காகவுமே நான் அரசியல் செய்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பங்காளதேஷில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையானது முற்றிலும் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் அரசியல் பழிவாங்கல்களைக் கொண்டது என அவர் சாடியுள்ளார்.
நான் மரணத்திற்கு அஞ்சமாட்டேன் என்று அவர் உறுதியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதத் தடை
தற்போது பங்காளதேஷில் தாரிக் ரஹ்மான் தலைமையில் அமைந்துள்ள பிஎன்பி அரசாங்கத்திற்கு ஷேக் ஹசீனா முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

நாட்டில் முறையான ஜனநாயகச் சூழலையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும். அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டவிரோதத் தடையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
சோடிக்கப்பட்ட போலி வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். நாட்டில் அமைதியான முறையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளையே அவர் முன்வைத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்