மீண்டும் ஆரம்பமாகும் உயர் தரப் பரீட்சை! வெளியிடப்பட்ட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான கல்வி வகுப்புகளை நடத்துவது நாளை (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடத்தப்படதாக உயர் தரப் பரீட்சை பாடங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சை திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பரீட்சை ஏற்பாடுகள்
அதன்படி, அந்தப் பரீட்சைகளுக்கான கல்வி வகுப்புகளை நடத்துதல், பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடத்துதல், யூக வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், மற்றும் பரீட்சை வினாத்தாள்களுக்கு ஒத்த கேள்விகள் வழங்கப்படும் என்று கூறும் சுவரொட்டிகள், பதாகைகள் அல்லது பிரசுரங்களை மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் வெளியிடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறி எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ செயல்பட்டால், அவர்கள் பரீட்சைச் சட்டத்தின் கீழ் குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2025 க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களை 2026 ஜனவரி 12 முதல் 20 வரை 2362 பரீட்சை மையங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |