க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு யாழ் பல்கலையின் முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த கருத்தரங்கானது எதிர்வரும் ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள கணித மற்றும் உயிரியல் விஞ்ஞான மாணவர்களுக்காகவே குறித்த கருத்தரங்கானது இடம்பெறவுள்ளது.
உதவிக் கருத்தரங்கு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் தேர்ச்சி பெற்ற பிரபல பாடசாலைகளின் ஆசிரியர்கள் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
கருத்தரங்கின் போது மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் மற்றும் மதிய உணவும் மாணவர் ஒன்றியத்தினரால் வழங்கப்படவுள்ளது.
முக்கிய அறிவிப்பு
இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவைகள் பரீட்சைகளுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளும் இக்குறித்த கருத்தமர்வில் பங்குபற்ற முடியும் என்பதோடு, வெளி மாவட்டங்களிலிருந்து பங்குபற்றும் முன்பதிவு செய்த மாணவர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
குறித்த கருத்தமர்வில் பங்குகொள்ளும் மாணவர்கள் வழங்கப்பட்ட QR Code இனை Scan செய்வதனூடாக அல்லது வழங்கப்பட்ட மின்னியல் இணைப்பினூடாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தினர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதிவிற்கான மின்னியல் படிவம் - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf8ZYVPGrun-t79EUFk17uU7J1sg8LzrSzvWdTxARXq7ngmIg/viewform
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |