மாவீரர் நாளுக்கு தயாராகும் சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
மாவீரர் நாளை (கார்த்திகை -27) முன்னிட்டு சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டடுள்ளன.
சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் இன்று (19) காலை குறித்த சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிரமதானப் பணியில் மாவீரர்களின் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள் ,பொதுமக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம் துயிலுமில்லம்
இம்முறை மாவீரர் தினத்தை எந்தவித பிரச்சினைகளும் இடம் பெறாத வகையில் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினர் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இம்முறை நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரச உயர் மட்டத்தினால் நாடு தழுவிய ரீதியில் ஏதேனும் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்படாதவிடத்து எவ்விதமான தடைகளும் விதிக்கப்பட மாட்டாது என அண்மையில் காவல்துறையினர் சார்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம் வடகிழக்கில் நீதி மன்றத் தடையுத்தரவின் மூலம் மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கு தடைசெய்யப்பட்டிருந்த பிரதேசமாக இப்பிரதேசம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |