நடுவானில் பறந்த போது திறந்த விமானத்தின் கதவு : அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம்
அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையமொன்றில் இருந்து 171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் அலஸ்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மக்ஸ் ரக விமானம் நேற்று (05) புறப்பட்டது.
விமானம், நடுவானில் 16,325 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் மைய பகுதியில் இருந்த கதவு திறந்து விமானத்தை விட்டு வீசியடிக்கப்பட்டுள்ளது.
திடீரென காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால், விமானத்தில் இருந்து பல பொருட்கள் உறிஞ்சப்பட்டதால் பயணிகளிடையே பதற்றம் நிலவியது.
தரையிறக்கப்பட்ட விமானம்
இதன்பின் உடனடியாக விமானம் போர்ட்லாண்ட் விமான நிலையத்திற்கு திருப்பட்டு, பாதுகாப்பாக நேற்றிரவு அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி முதல் வர்த்தக பயன்பாட்டுக்கு வந்த இந்த போயிங் ரக விமானம் இதுவரை 145 முறை விமான பயணத்தில் ஈடுபட்டுள்ளது என பிளைட்ராடார் 24 என்ற விமான இயக்க கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |