மதுபோதையில் சென்ற குழு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் தாக்குதல்!
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மீது மதுபோதையில் சென்றவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(25) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது,மதுபோதையில் காரில் சென்ற நான்கு நபர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனை தடுக்க சென்ற பொது நபர் ஒருவர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மது போதையில் அடாவடி
மது போதையில் சென்றவர்களால் கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான குழுக்களின் செயற்பாட்டினை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |