ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு பிரிந்திருப்பதா? ஒன்றிணைந்து செல்வதா? அலி சப்ரி கேள்வி

Sri Lanka Parliament Ali Sabry
By Vasanth Jan 07, 2021 04:42 AM GMT
Report

ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா? ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வதா? என்று நாம் சிந்திக்க வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். மேலும் இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான இடமாக இந்த நாடாளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்தார்.

சில சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 73 வருடங்கள் ஆகின்றன. இந்தப் பகுதியில் நாம் இலங்கையர் என்ற வகையில் ஒற்றுமையைக் காண தவறிவிட்டோம்.

உலகில் பல நாடுகள் இன, மத, பிரதேச அடிப்படையில் பிரிந்து இருந்தன. பின்னர் அவற்றிலிருந்து பாடம் கற்றன. 73 ஆண்டுகள் கடந்தும் எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான வேறுபாடு குறைந்ததாக தெரியவில்லை. வேறுபட்ட இனத்தை, மதத்தை சேர்ந்தவராக இருப்பதாலோ வேறுபட்ட மொழியைப் பேசுவதால் எதிரிகள் ஆகிவிடுவதில்லை.

வேற்றுமையில் ஒற்றுமையை காண்பதையே அரசியலமைப்பும் நமது தேசிய கீதமும் வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையிலேயே பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இறந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் அனைவரும் தவறு செய்த இடங்கள் பல இருக்கவே செய்கின்றன.

1958,1978 கலவரங்கள், யாழ். நூலக எரிப்பு, 1983 இனக் கலவரம், காத்தான்குடி தாக்குதல், அண்மையில் இடம்பெற்ற சஹ்ரானின் தாக்குதல் எல்லாம் கரும் புள்ளியாக அமைந்தன. சமூகத்தை ஓரம்கட்டி இதற்கு தீர்வு காண்பது என்பது தவறான வழியைத் தான் காட்டும். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா? ஒன்றிணைந்து முன்னேறி செல்வதா? என்று நாம் சிந்திக்க வேண்டும். இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான தளமாக இந்த நாடாளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் இடமாக இந்தப் நாடாளுமன்றம் பயன்படுத்தப்பட்டால் எதிர்காலம் சுமுகமாக அமையாது. சில ஊடகங்கள் இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்த முயல்கின்றன. இரண்டாவது உலக யுத்தத்தில் ஹிட்லர் நடந்து கொண்ட விதமும் இன்று சில ஊடகங்கள் நடந்து கொள்ளும் விதமும் வேறுபட்டவை அல்ல . உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ள அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அதேபோன்று இந்தத் தாக்குதல் உடன் தொடர்பு இல்லாத எவருக்கும் தண்டனை வழங்கப்படக் கூடாது. முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கும் திருமண வயதை 18 ஆக மட்டுப்படுத்தவும் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் . புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக சிறந்த நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

எல்லா சமூகத்தவர்களும் தவறு செய்துள்ளனர். கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்று ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றார்.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026