மற்றுமொரு சட்டமூலம் நாடாளுமன்றம் வருகிறது
கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்குவதை உறுதிப்படுத்தும் கொவிட் 19 ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்டமூலம் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுப் பரவல் நீடிக்கும் காலப்பகுதியில் மேற்கொள்ள முடியாது விடுபடும் சில விடயங்களை, பிற் காலப்பகுதியில் மக்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்பை வழங்கும் ஏற்பாடுகள் இந்தச் சட்டத்தின் பிரகாரம் உறுதிப்படுத்தும் என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணொளி தொழில்நுட்பம் ஊடாக வழக்கு விசாரிக்கும் முறையை சட்டத்தினுடாக உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்தச் சட்டமூலத்தில் உள்ளடக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சர் கூறியுள்ளார்.
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான சட்ட விதானங்களை உள்ளடக்கி பல வர்த்தமானிகளை அரசாங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.