அநுராதபுர சிறை சென்று வந்த நீதி அமைச்சர் தெரிவித்த விடயம்!
சிறைச்சாலையில் பாதுகாப்பு தொடர்பிலோ அல்லது வசதிகள் தொடர்பிலோ எவ்வித பிரச்சினைகளும் தமக்கு இல்லை என்று அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ச் சிறைக்கைதிகள் தெரிவித்தாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரச்சினைக்காக அன்றி தமது குடும்ப உறுப்பினர்களை பார்ப்பதற்கு வசதியாகவே தமது சொந்த இடங்களுக்கு இடமாற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை நேற்றைய தினம் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளளார்.
முன்னாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தே தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து ஏதேனும் அழுத்தங்கள் இடம்பெற்றதா என ஊடகவியலாளர் ஒருவர் எமுப்பிய கேள்விக்கு அவ்வாறு எந்தவித அழுத்தமும் இடம்பெறவில்லை என பதில் அளித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தே தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சுயாதீனமாக நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.