பூமி அழியப்போகின்றதா... வேற்றுக்கிரகவாசிகள் மேற்கொண்ட Genetic Harvest!
பிரபஞ்சத்தில் மனிதர்களை விட அறிவுத்திறன் மிக்க வேற்றுக்கிரகவாசிகள் (Aliens) வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் பூமியை ஒரு மரபணுப் பண்ணையாக (Genetic Farm) பயன்படுத்தி வருவதாகவும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
மனிதகுலத்தின் தனித்துவமான DNA மற்றும் மரபணுக் கூறுகளைத் தங்களின் சொந்த இனப்பெருக்கத் தேவைகளுக்காக ஒட்டுமொத்தமாகச் சேகரிக்கும் ஜெனிடிக் ஹார்வெஸ்ட் (மரபணு அறுவடை) என்ற ரகசியத் திட்டத்தை அவர்கள் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மனித நாகரிகம் ஒரு குறிப்பிட்ட எல்லையை எட்டும்போது இந்த வேற்றுக்கிரகவாசிகள் பூமியைத் தாக்கி ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் அழித்து, இந்த அறுவடையை நிகழ்த்துவார்கள் என்று இக்கோட்பாடு எச்சரிக்கிறது.
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியல் உலகினர் இத்தகைய கூற்றுகளை முற்றிலுமாக மறுப்பதுடன் இதற்கு எவ்வித அதிகாரப்பூர்வமான அல்லது அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
தற்போதைய நிலையில், இது அறிவியல் புனைகதைகளிலும் (Sci-Fi) வேற்றுக்கிரகவாசிகள் குறித்த தீவிர கற்பனைக் கோட்பாடுகளிலும் (Conspiracy Theories) விவாதிக்கப்படும் ஒரு பரபரப்பான கதையாகவே பார்க்கப்படுகின்ற நிலையில் அதனை விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்